சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி


சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 10 March 2022 2:12 AM IST (Updated: 10 March 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது

திருச்சி
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் அமிர்த பெருவிழா என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் திருச்சியில் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் ஹாலில் நேற்று தொடங்கியது.
இதற்கு தகவல் தொடர்பு துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். மத்திய அரசின் திருச்சி களவிளம்பரத்துறை அதிகாரி தேவி பத்மநாபன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி கோட்டாட்சியர் தவச்செல்வம் கலந்து கொண்டு, இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். 
வரலாறு
கண்காட்சியில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியடிகள் பற்றிய வரலாறு, சத்தியாகிரக போராட்டத்தின் வலிமை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசத்திற்காக போராடிய நினைவுகள், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜான்சிராணி லட்சுமிபாய், ராணி வேலு நாச்சியார், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட பல்வேறு தேசத் தலைவர்களின் புகைப்படங்களும், அவர்களின் உரைகளின் சில வரிகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் இன்றைய மத்திய அரசு நாட்டு மக்களின் நலன் காக்கும் வகையில் மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இந்த கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்து பார்த்து வியந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி வருகிற 13-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story