சிக்கமகளூரு அருகே தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் படுகொலை


சிக்கமகளூரு அருகே தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் படுகொலை
x
தினத்தந்தி 10 March 2022 2:24 AM IST (Updated: 10 March 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோண மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் விடுதியில் உள்ள படகு குழாமில் வீசப்பட்டுள்ளது

சிக்கமகளூரு: சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோண மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் விடுதியில் உள்ள படகு குழாமில் வீசப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

படகு குழாமில் வீச்சு

சிக்கமகளூரு மாவட்டம் சந்திர திரிகோணமலைப் பகுதியில் உள்ள பாபாபுடன்கிரி செல்லும் சாலையில் அத்திகுந்தி என்னும் தனியார் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் படகு குழாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த படகு குழாமில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி விடுதியில் தங்கி இருந்தவர்கள் சிக்கமகளூரு புறநகர் போலீசில் தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றினர். பின்னர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. யாரோ மர்ம நபர்கள் வாலிபரை கொன்று உடலை படகு குழாமில் வீசியிருந்தது தெரியவந்தது. 

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். முதற்கட்டமாக அந்த வாலிபர் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story