சப்தரிஷீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்-17-ந்தேதி நடக்கிறது
சப்தரிஷீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்-17-ந்தேதி நடக்கிறதுமுகூர்த்தக்கால் நடப்பட்டது
லால்குடி
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்ட திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம், லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷன் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்திற்கான முகூர்த்தக்காலை நட்டு வைத்தனர். 11-ம் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு பூத வாகனம், அன்ன வாகனம் புறப்பாடும், 12-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. 13-ந் தேதி மதியம் கைலாச வாகனம், சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு திருவீதி உலாவும், 14-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், மதியம் 12 மணிக்கு சோமாஸ் கந்தருக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வீதிஉலா நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெற உள்ளது. 16-ந்தேதி மதியம் பல்லக்கு குதிரை வாகனம், இரவு 7 மணிக்கு வீதி உலாவும் நடைபெற உள்ளது. 17-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story