ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.20 லட்சம் பறிமுதல்


ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.20 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2022 2:42 AM IST (Updated: 10 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சத்தை ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர்.

சூரமங்கலம்:-
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சத்தை ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர்.
ரூ.20 லட்சம்
சேலம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸ்காரர் தேவராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய சுரங்கப்பாதை வழி அருகே சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். 
அவர்களை பிடித்து ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உசேன் (வயது 22) என்பவர் வைத்திருந்த கைப்பையில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.20 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. 
அவருடன் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சஜில் (24), சேலத்தை சேர்ந்த அருண்குமார் (33) ஆகிய 2 பேர் உடன் இருந்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. 
பறிமுதல்
இதையடுத்து ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை சேலம் வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.  இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story