உலக மகளிர் தினம் கொண்டாட்டம்
உலக மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது
திருச்சி
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.விவேகானந்தன் ஆகியோர் அறிவுரையின் பேரில் உலக மகளிர் தினம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி 2-வது ஜூடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு திருவேணி கலந்துகொண்டு, பெண்களுக்கு எது அழகு என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், ‘இன்று பெண்களால் எதுவும் முடியும் என்ற நிலை வந்துள்ளது. பெண்கள் அழகுடன் இருப்பது மட்டுமல்ல, படிப்பு மற்றும் ஆளுமை திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். தொடர்ந்து சாதனை படைத்தவர்களுக்கு நினைவு பரிசுகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் கனிமொழி, கல்லூரி முதல்வர் வாசுகி மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story