கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய்க்கு அரசு பணி
மேலூர் அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய்க்கு அரசு பணி அமைச்சர் மூர்த்தி நடவடிக்கையால் வழங்கப்பட்டது.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 8 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்குவதுடன் சிறுமியின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அந்த சிறுமியின் குடும்பத்தினரும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நடவடிக்கையால், அந்த சிறுமியின் தாய் சபரிக்கு மேலவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவை மேலூர் தாசில்தார் இளமுருகன் முன்னிலையில் கொட்டாம்பட்டி யூனியன் அதிகாரிகள் அந்த சிறுமியின் தாயாரிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story