ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி; ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனை
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனையானது.
ஈரோடு
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.7-க்கு விற்பனையானது.
தக்காளி
ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அங்கு தினமும் லாரிகளில் பெட்டி, பெட்டியாக தக்காளி கொண்டு வரப்பட்டு ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் காய்கறி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையும் நடத்தப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது. சமையலுக்கு தக்காளி அத்தியாவசியம் என்பதால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
கடும் வீழ்ச்சி
இந்தநிலையில் தக்காளியின் வரத்து அதிகரித்தது. இதனால் தக்காளியின் விலை வேகமாக குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், தக்காளியின் வரத்து அதிகரித்து இருப்பதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறுகையில், “நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு 6 ஆயிரம் பெட்டிகளில் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.இதில் 30 கிலோ கொண்ட பெரிய தக்காளி உடைய ஒரு பெட்டி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சில்லரை விலையில் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை விலைபோனது. வரத்து அதிகமாக இருப்பதால் தக்காளியின் விலை மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது”, என்றார்.
Related Tags :
Next Story