பெண் விஷம் குடித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50) விவசாயி. இவரது மனைவி மனோரமா (48). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மனோரமா சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மனோரமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story