ஈரோடு மாவட்டத்துக்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ்கள் சேவை; கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்துக்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ்கள் சேவையை கலெக்டா் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தாா்.
ஈரோடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய அவசரகால வாகனங்களான 108 ஆம்புலன்ஸ்கள் சேவை தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி கொடி அசைத்து சேவையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 1,303 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த சேவையை துரிதப்படுத்த புதிதாக 188 ஆம்புலன்ஸ்கள் சேவையை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 3 புதிய 108 ஆம்புலன்ஸ்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 42 அவசரகால வாகனங்கள் உள்ளன. கூடுதலாக 7 அவசரகால வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தற்போது 3 வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம், திண்டல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story