சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. காலை 9.45 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் முத்தையா பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமியை கூடாரப்பாறை மலையில் இருந்து மண்டகபடிதாரர்கள் அழைத்து வந்து 7-ம் திருநாள் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 10-ம் திருநாளான வருகிற 18-ந்தேதி இரவில் தெப்பத்தேரோட்ட விழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story