நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்


நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 10 March 2022 4:44 AM IST (Updated: 10 March 2022 4:44 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி நகராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நகராட்சி தலைவி விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் குமார் சிங் வரவேற்று பேசினார்.

திட்டத்தின் தொடக்கமாக புளியங்குடி 26-வது வார்டு கோட்டை திரடு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், கைலாச சுந்தரம், களப்பணி உதவியாளர் கார்த்திகேயன், குழாய் பொருத்துனர் கண்ணன், மின் கம்பியாளர் காளித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story