தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.14½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.14½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் சுமார் 2 டன்னாக இருந்த பட்டுக்கூடு வரத்து நேற்று 1¾ டன்னாக குறைந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.891-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு நேற்று ரூ.6 விலை குறைந்தது. அதிகபட்சமாக ரூ.885 எனவும், குறைந்தபட்சமாக ரூ.682 எனவும், சராசரியாக ரூ.836.95 எனவும் ஒரு கிலோ பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 109 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனையானது.
Related Tags :
Next Story