மனு அளித்த 24 மணி நேரத்தில் குறைந்த மின் அழுத்தம் சீரமைப்பு
மனு அளித்த 24 மணி நேரத்தில் குறைந்த மின் அழுத்தம் சீரமைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் நத்தம், சுந்தரம்பள்ளி, ஆவல்நாயக்கன பட்டி, செவ்வாத்தூர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள், வீடுகளில் உள்ள டி.வி. பழுதடைந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் தொகுதி அ.நல்லதம்பி எம்.எல்.ஏ., தலைமையில், கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நத்தம் ரங்கசாமி குமார், சுந்தரம்பள்ளி கருணாநிதி, ஆவல்நாய்கன்பட்டி சுகுமார், செவ்வாத்தூர் மோகனா மற்றும் செவ்வாத்தூர் கவுன்சிலர் சக்கரவர்த்தி, நரவிந்தம்பட்டி சக்கரவர்த்தி ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து குறைந்த மின்னழுத்தத்தம் குறித்து மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்டு விரைவில் குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி உடனடியாக குறைந்த மின் அழுத்தம் உள்ள நத்தம், செவவாத்தூர், சுதந்திரம் பள்ளி, காக்கங்கரை, ஆவல் நாயக்கன்பட்டி ஊராட்சிகளில் நல்லதம்பி எம்.எல்.ஏ., மின்சாரத்துறை பொறியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார்கள்.
பின்னர் உடனடி நடவடிக்கையாக மின்சாரத்துறை சார்பில் விரைந்து செயல்பட்டு 24 மணி நேரத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள டிரான்ஸ்பார்மர்களை மாற்றி, புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story