பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 5:29 PM IST (Updated: 10 March 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

திருவண்ணாமலை

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. 

முன்னதாக அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தரணி ஆலை-2-ன் தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். 

மாநில பொது செயலாளர் ரவிந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில் 2018-2019ம் ஆண்டு கரும்பு பண நிலுவை பாக்கி ரூ.26 கோடி வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும். தரணி ஆலையை தேசிய கடன் தீர்ப்பாயத்தின் படி முதலாவதாக கரும்பு விவசாயிகளுக்கு ரூ.106 கோடியை சேர்த்து வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும். 

தரணி ஆலை-2யை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். மத்திய அரசு வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். கரும்பு வெட்டு கூலியில் ஆலை நிர்வாகம் பாதியை ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். 

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பண்ணாரி ஆலை செயலாளர் பலராமன், தரணி ஆலை செயலாளர் பாலமுருகன் உள்பட கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story