விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
போடி அருகே மக்காச்சோளம் சாகுபடி குறித்து வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
போடி:
போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரின் வயல் விழா மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ரங்கராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து மக்காச்சோளம் பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண்மை அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும் மக்காச்சோளம் பயிரில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை பற்றியும், அறுவடைக்குப் பின்செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கி கூறினர். முகாமில் பத்ரகாளிபுரம் மற்றும் அதனை சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story