ஒலக்காசி பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்க வேண்டும்


ஒலக்காசி பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 March 2022 5:34 PM IST (Updated: 10 March 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

ஒலக்காசி பகுதியில் அரசு மணல்குவாரி தொடங்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம்

ஒலக்காசி பகுதியில் அரசு மணல்குவாரி தொடங்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட்டு வண்டி தொழிலாளர் கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. குடியாத்தம் பகுதி மாட்டுவண்டி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்.பங்மூர்த்தி தலைமை தாங்கினார். டி.விஜயன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன்,  மாவட்ட துணைத்தலைவர் பி.காத்தவராயன், துணை செயலாளர் சி.சரவணன், பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.குப்பு, ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் கே.சாமிநாதன், மரம் ஏறும் தொழிலாளர் சங்க செயலாளர் பி.குணசேகரன், பீடி சங்க பொருளாளர் எஸ்.சிலம்பரசன் உள்ளிட்டோர் விளக்க உரை ஆற்றினார்கள்.

குடியாத்தம் பகுதி மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவராக எஸ்.பங்மூர்த்தி, செயலாளராக டீ.விஜயன், பொருளாளராக அசோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அரசு மணல்குவாரி

கூட்டத்தில் குடியாத்தம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். குடியாத்தம் தாலுகா ஒலக்காசி ஊராட்சி பகுதியில் அரசு மணல் குவாரி தொடங்கிட வேண்டும்.

அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாட்டுவண்டி தொழிலாளர்கள் செயல்படுவார்கள் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story