கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார்.
பள்ளி மாணவன் பலி
திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு பசவன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சுரேஷ் (வயது 13). இவன் ஊத்தங்கரை அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரிக்கு உறவினர் வீட்டிற்கு வந்திருந்த மாணவன் சுரேஷ், கொண்டேப்பள்ளி ஏரி பக்கமாக சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி ஏரிக்குள் விழுந்தான். இதில் நீரில் மூழ்கி சுரேஷ் பலியானான்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ஏரி பகுதிக்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story