நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 10 March 2022 5:39 PM IST (Updated: 10 March 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சார நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம்
நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிலக்கோட்டை நகர் பகுதிகள், அப்பாபிள்ளைபட்டி, மணியகாரன்பட்டி, என்.கோவில்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சி.புதூர், சீதாபுரம், சங்கால்பட்டி, பங்களாபட்டி, எம்.குரும்பபட்டி, வெங்கடாத்திரிகோட்டை, குளத்துபட்டி, என்.ஊத்துபட்டி, வீலிநாயக்கன்பட்டி, மல்லணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


இதேபோல் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரெட்டியார்சத்திரம், அம்மாபட்டி, நடுப்பட்டி, மாங்கரை, கொட்டாரபட்டி, தாதன்கோட்டை, புதுக்கோட்டை, ஜக்கல்நாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, பொன்மனம்கோட்டை, கோட்டைபட்டி, நரிபட்டி, செம்மடைப்பட்டி, போத்திநாயக்கன்பட்டி, கெம்மணம் பட்டி, எல்லப்பட்டி, கட்டசின்னாம்பட்டி, சி.பி.கே.புதூர், ராஜாபுதூர், செட்டியபட்டி, எஸ்.ஆர்.புரம், அரசமரத்துபட்டி, போலியமனூர், திருமலைராயபுரம், நீலமலைக்கோட்டை, கோம்பை, மூலச்சத்திரம், குமாரபாளையம், அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, ரெட்டியார்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். 

பழனி, நல்லமனார்கோட்டை
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நல்லமனார்கோட்டை, குளத்தூர், சூடாமணிபட்டி, காலனம்பட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூர், கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பழனி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

Next Story