தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்துக்கு தேசிய பாதுகாப்பு விருது
தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுக ஆணையத்துக்கு தேசிய பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்துக்கு தேசிய பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு
இந்தியஅரசானது 1965 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும்தொழிற்சாலை ஆலோசனை மற்றுமு் தொழிலாளர் நிறுவனத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதானது 1971-ஆம் ஆண்டு முதல் இந்திய துறைமுகங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே சரியான பாதுகாப்பு செயல்திறனுக்கான அங்கீகாரமாகவும், விபத்தை தடுப்பதற்கும் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், நிர்வாகத்தையும், தொழிலாளர்களையும் ஊக்குவிப்பதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வ.உ.சி. துறைமுக ஆணையம் துறைமுக செயல்பாடுகளின் போது சரக்கு கையாளும் உபகரணங்களும். எந்திரங்களும் சரியான முறையில் பொருத்தப்பட்டிருப்பதையும் அதன் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. துறைமுக சரக்குகையாளும் செயல்பாடுகளில் ஈடுபடும் துறைமு கஊழியர்கள் மற்றும் பிறஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்துதல், பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், துறைமுக செயல்பாடு பகுதிகளை ஆய்வு செய்தல், துறைமுகத்தின் சாலைகளில் இரவு நேரசெயல்பாடுகளுக்கு தேவையான ஒளி உறுதி செய்தல், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், துறைமுக நடவடிக்கைகளில் தரமான பாதுகாப்பை பேணுவதன் முக்கியத்துவம் குறித்த தகவலை தெரியப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளதால் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடிய விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு உள்ளது. இதனால் விருது வழங்கப்பட்டு உள்ளது.
விருது
இந்த விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடந்தது. விழாவில் மத்திய பெடரோல், இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி ராமேஸ்வரர் டெலி முன்னிலை வகித்தார். மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுசூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூறும் போது, விருது பெற உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், உபயோகிப்பாளர்கள், துறைமுக சரக்கு பெட்டக முனைய இயக்குபவர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் விபத்து இல்லாத துறைமுகமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், பாதுகாப்பான துறைமுகமாக நமது துறைமுகம் திகழ அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story