வந்தவாசி ரங்கநாதபெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா
வந்தவாசி ரங்கநாதபெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வந்தவாசி
வந்தவாசியில் பிரசித்தி ெபற்ற ரங்கநாதபெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதையொட்டி இன்று அதிகாலை கோவில் பட்டாச்சாரியார்கள் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.
உற்சவரை கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருள செய்து, பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் கோவிலின் கொடிமரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்றினர்.
அதன்பிறகு உற்சவர் ரங்கநாதபெருமாளுக்கும், கொடிமரத்துக்கும் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா.. ரங்கா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story