வேடசந்தூரில் வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் முற்றுகை
வேடசந்தூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சியில் அய்யனார்நகர் உள்ளது. இங்கு 89 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 50 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாசில்தார் மணிமொழியிடம் கோரிக்ைக குறித்து மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story