மானபங்கம் செய்த ஐ.டி. மேலாளருக்கு ஜெயில்
பெண் காவலாளியை மானபங்கம் செய்த ஐ.டி மேலாளருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து அந்தேரி கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
பெண் காவலாளியை மானபங்கம் செய்த ஐ.டி மேலாளருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து அந்தேரி கோர்ட்டு உத்தரவிட்டது.
மானபங்கம்
மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியில் ஐ.டி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்தவர் ஹேமந்த் ரானே (வயது50). கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த 33 வயதுயுடைய பெண் ஊழியரை தனது அறைக்கு அழைத்து உள்ளார்.
இதற்கான காரணம் புரியாமல் பெண் காவலாளி அறைக்கு சென்றார்.
அங்கிருந்த மேலாளர் பேச்சுவாக்கில் பெண் காவலாளியின் உடலில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்தார்.
ஓராண்டு கடுங்காவல்
இதனால் பாதிக்கப்பட்ட அவர் சாகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கோர்ட்டில் விசாரணை நிறைவு அடைந்த நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து குற்றவாளி ஹேமந்த் ரானேவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story