முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 March 2022 7:31 PM IST (Updated: 10 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடலூர்: 

முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

 நேற்று  அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று  காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இன்று அணையின் நீர்மட்டம் 126.80 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 8 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடியிலிருந்து 511 கனஅடியாக கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால்  லோயர்கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 54 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story