நடிகர் சூர்யா நடித்த படத்தை திரையிட பா.ம.க.வினர் எதிர்ப்பு திண்டுக்கல் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு


நடிகர் சூர்யா நடித்த படத்தை திரையிட பா.ம.க.வினர் எதிர்ப்பு  திண்டுக்கல் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 March 2022 7:37 PM IST (Updated: 10 March 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யா நடித்த படத்தை திரையிட பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திண்டுக்கல் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


திண்டுக்கல்:
நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ சினிமா படத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவர் தற்போது நடித்து வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையிட கூடாது என்று கூறி பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நடிகர் சூர்யா நடித்த சினிமா படம் இன்று திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தியேட்டர்கள் முன்பு பா.ம.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நடிகர் சூர்யா நடித்த சினிமா படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அந்த தியேட்டர்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.


Next Story