விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2022 7:50 PM IST (Updated: 10 March 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

மது அருந்தியதை கர்ப்பிணி மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு முன்னுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரேணு (வயது 21), விவசாயி. 

இவருக்கும் ஜமுனாமரத்தூர் தாலுகா நம்மியம்பட்டு அருகேமுதலைமடு பகுதியைச் சேர்ந்த பிரியாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நிலத்தில் ரேணு மது அருந்தியுள்ளார். அதனை மனைவி பிரியா தட்டிக் கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

 இதனால் மனவேதனை அடைந்த ரேணு பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி இருந்தார். உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story