கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 March 2022 12:15 AM IST (Updated: 10 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குத்தாலம்:-

குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலாடுதுறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். அசிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர் ஜனார்த்தனன், கால்நடை ஆய்வாளர் கயல்விழி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சதீஷ்குமார், உஷாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story