ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை


ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை
x
தினத்தந்தி 10 March 2022 8:14 PM IST (Updated: 10 March 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டு குழுவின் சார்பில், ‘சுயமான கற்றல் மூலம் தங்களது திறமைகளை கண்டறிதல்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார்.
கல்லூரி ஆங்கில துறை தலைவர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், பல்வேறு பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள் தங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை தெரிந்து கொள்வது, அதன் மூலம் மாணவர்கள் பெறும் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார். பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Next Story