காரைக்காலில் முதன்முறையாக டிரோன் மூலம் வீடுகள், காலி மனைகள் அளவிடும் பணி


காரைக்காலில் முதன்முறையாக  டிரோன் மூலம் வீடுகள், காலி மனைகள் அளவிடும் பணி
x
தினத்தந்தி 10 March 2022 8:30 PM IST (Updated: 10 March 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் முதன்முறையாக டிரோன் மூலம் வீடுகள், காலி மனைகளை அளவிடும் பணி தொடங்கியது.

காரைக்கால், மார்ச்.10-
காரைக்காலில் முதன்முறையாக டிரோன் மூலம் வீடுகள், காலி மனைகளை அளவிடும் பணி தொடங்கியது.
சொத்து அட்டை
மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் ஸ்வாமித்வா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது கிராமப்புற வசிப்பிடங்களில் வாழ்வோருக்கு சொத்து உரிமையை அளிக்க ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொத்துக்களை கடன் வாங்குவதற்கும் மற்றும் பிற நிதி தேவைகளுக்கும் பயன்படுத்திக்   கொள்ளலாம்.      இத் திட்டம் புதிதாக வந்துள்ள டிரோன் தொழில்நுட்பம் மூலம், கிராமங்களில் உள்ள வாழ்விட பகுதிகளின் எல்லைகளை கணக்கெடுத்து துல்லியமாக வரையறை செய்து, பயனாளிகளுக்கு சொத்து அட்டை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. 
சந்திர பிரியங்கா
அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக டிரோன் கேமரா மூலம் வீடுகள், காலி மனைகளை அளவிடும் பணி குறித்து,  அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. 
கடந்த வாரம் இந்த பணி தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி அருகே உள்ள சண்முகா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இப்பணி தொடங்கியது. 
இதை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இதில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ், துணை கலெக்டர் (வருவாய்) ஆதர்ஷ், தாசில்தார்கள் மதன்குமார், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பணி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். அடுத்த 15 நாட்களுக்குள் இப்பணி முழுவதுமாக முடிவடையும் என தாசில்தார் மதன்குமார் தெரிவித்தார்.

Next Story