தூத்துக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் எல் ஐ சி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
மத்திய அரசு எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் சீனிவாசன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர். கவுரி நன்றி கூறினார்.
இதேபோன்று கோவில்பட்டி அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்க கிளை தலைவர் ஆனந்த் தலைமையில், கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று மாலையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை கோவில்பட்டி நகரசபை தலைவர் கா. கருணாநிதி தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, நகரசபை கவுன்சிலர் உலக ராணி, ஊழியர் சங்கத்தினர் முருகன், தேவ பிரகாஷ், லெனின் கிருஷ்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story