சுடுகாட்டில் பதுக்கிய 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


சுடுகாட்டில் பதுக்கிய 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2022 8:49 PM IST (Updated: 10 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே சுடுகாட்டில் பதுக்கிய 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

சாத்தான்குளம்:
 சாத்தான்குளம் அருகே உள்ள விஜயனூர் பகுதியில் உள்ள சுடுகாட்டின் பின்புறம் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தனிபிரிவு போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story