மருத்துவம்-ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் திறப்பு


மருத்துவம்-ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 11 March 2022 12:15 AM IST (Updated: 10 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவம்-ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை:-

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கான பல்வேறு துறை அலுவலகங்கள் மயிலாடுதுறையில் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனராக முதுநிலை டாக்டர் சிவக்குமார் கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகம் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவ பிரிவில் 3-வது மாடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த அலுவலகம் வாயிலாக மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பொறையாறு, குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நிர்வாக பணிகளை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் மேற்கொள்வார். அவருக்கு, மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜசேகர், மாவட்ட சுகாதாரத்துறை திட்ட அலுவலர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story