‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிழற்குடை வேண்டும்
காரைக்கால் மாவட்டம் நிரவி பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும்போது சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நிரவி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-முத்தையன், வடக்கு பொய்கைநல்லூர்.
Related Tags :
Next Story