குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை
நெல் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திட்டச்சேரி:-
நெல் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் சோதனை
திருச்சி சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம் மேற்பார்வையில் நாகை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் செந்தில்குமார், ரீனா ஆகியோரை கொண்ட குழுவினர் திட்டச்சேரி அருகே பனங்குடி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்குகளுக்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
‘டிரான்சீட்’ படிவம்
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் மட்டும் நெல் மூட்டைகளை கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில் இந்த சோதனை நடந்தது. அப்போது லாரி டிரைவர்களிடம் நெல் மூட்டைகள் ஏற்றப்படும் இடம், இறக்கப்படும் இடம், நெல் சாகுபடி குறித்த விவரங்கள் ஆகியவை கொண்ட ‘டிரான்சீட்’ படிவம் உள்ளதா? அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனையை மேற்கொண்டதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story