கோடியக்காட்டில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்
வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:-
வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூலிகைகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காடு பகுதியில் 2 ஆயிரத்து 250 எக்டேரில் காடு அமைந்து உள்ளது. இந்த காடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், முயல், காட்டுப்பன்றி, நரி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த காட்டில் விடத்துவரை, பாலா, நாவல், அரசு, ஆலமரம், பூவரசு, உதியன், புங்கன் போன்ற பலவகையான மரங்கள் உள்ளன.
மேலும் 156 வகையான மூலிகைச் செடிகளும் மற்றும் பல்வேறு வகையான முள் செடிகளும் வளர்ந்துள்ளன. இந்த காட்டில் மான்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து புல்வெளியில் மேய்வதற்கு அதிகமான இடங்கள் உள்ளது. ஆனால் காட்டில் கருவேல மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
கருவேல மரங்கள் அகற்றம்
இந்த கருவேல மரங்கள் நரிகள் மற்றும் நாய்கள் பதுங்கி இருந்து மான்களை வேட்டையாடுவதற்கு வசதியாக வளர்ந்துள்ளது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் காட்டில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவெடுத்து அதன்படி எந்திரங்கள் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கருவேல மரங்களை அகற்றி விட்டால் வனவிலங்குகள் பாதுகாப்பாகவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமலும் சுதந்திரமாக சுற்றித் திரிய வாய்ப்பு ஏற்படும் என்றும், சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வந்து மான்களை கண்டு ரசிக்க முடியும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
கருவேல மரங்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா உத்தரவின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story