பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை
உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துவது என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை
உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துவது என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று காலை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எம்.ரொனால்டு செல்டன் பெர்ணான்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
பழைய கட்டிடங்கள் இடிப்பு
இந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் பழுதடைந்து, பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள சத்துணவுக்கூடம், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், மோட்டார் அறை கட்டிடம், கீழ்நிலைத்தண்ணீர் தொட்டி என மொத்தம் 35 கட்டிடங்களை, மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்துவது.
ஊராட்சி ஒன்றிய பொதுநிதி 2021-2022-ன் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், 15-வது நிதிக்குழு அடிப்படை நிபந்தனை மற்றும் நிபந்தனையற்ற மானியம் (வட்டார ஊராட்சி) 2022-2023-ம் ஆண்டு திட்டத்தின்கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சதவீத அடிப்படையில் புதியதாக பணிகளை தேர்வு செய்வது.
உள்பட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜி.ஜனார்த்தனன் மற்றும் கே.பி.குப்புசாமி, ஆர்.மோகன்ராஜ், நாகமாணிக்கம் உள்ளிட்ட ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பேசினர்.
Related Tags :
Next Story