மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 33). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா (22). இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நித்யா சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த வரதராஜன் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வெறுப்படைந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதராஜன் இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து எலச்சிபாளையம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story