நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்
நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி நடக்க உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதநாயகம், சாந்தி, நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட 47 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெமிலி ஒன்றியத்தில் குறைந்தது 2 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் குறைந்தது 50 இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும், அதன் மூலம் நெமிலி ஒன்றியத்தில் படித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைத்து, அவர்களின் குடும்ப பொருளாதாரம் மேம்படும். எனவே அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கூடுதல் கவனம் செலுத்தி தங்கள் பகுதியில் ஆட்டோ மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்தத் தகவலை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு அன்றைய தினமே உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பணி ஆணை நேரில் வழங்குகிறார், என தெரிவித்தார்.
Related Tags :
Next Story