ஆதலையூரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
திட்டச்சேரி:-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஆதலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் மணிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார், ஏனங்குடி மருத்துவ அலுவலர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ஏனங்குடி, ஆதலையூர், கேதாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story