கச்சிராயப்பாளையத்தில் முட்புதரில் கிடந்த கோவில் உண்டியல்
கச்சிராயப்பாளையத்தில் முட்புதரில் கிடந்த கோவில் உண்டியலை போலீசாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் சின்னசேலம் சாலையில் காகித ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு முன்பு உள்ள முட்புதரில் மரத்தால் செய்யப்பட்ட கோவில் உண்டியல் கேட்பாரற்று கிடந்தது. இதை நேற்று அந்த வழியாக விவசாய வேலைக்கு சென்றவர்கள் பார்த்து, கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த உண்டியலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏதோ அருகில் உள்ள கோவில் உண்டியலை கொள்ளை அடித்த கும்பல், அதில் உள்ள பணத்தை திருடிவிட்டு, உண்டியலை மட்டும் முட்புதரில் வீசிச்சென்றது தெரிந்தது.
தொடர்ந்து அந்த உண்டியல் எந்த கோவிலுக்கு உரியது.அந்த உண்டியலை உடைத்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது, அதை உடைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story