கடத்த முயன்ற 123 கிலோ கஞ்சா பறிமுதல்
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 123 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
கம்பம்:
கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படு்ம் வகையில் 5 சாக்குமூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் 123 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கம்பம் கோம்பை ரோடு தெருவை சேர்ந்த அன்பு (வயது 25), சஞ்சய்குமார் (21), சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (26), சுப்பிரமணி (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story