நாய்க்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி டாக்டர்கள் சாதனை
மும்பையில் நாய்க்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
மும்பை,
மும்பையில் நாய்க்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
இதயத்தில் அடைப்பு
மும்பை லோயர் பரேல் பகுதியில் பிராத் திவாரி (வயது30) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ‘ரோனி திவாரி’ என்ற பெயரிட்ட நாயை ஆசையாக வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நாய் ரோனிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரோனி சோர்வடைந்து காணப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அந்த நாயை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது நாய்க்கு பல சோதனைகள் செய்யப்பட்டன.
இதில் இ.சி.ஜி. சோதனையின் போது அதற்கு இதய துடிப்பு குறைந்து இருப்பது தெரியவந்தது. இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக 12 வயது ரோனியின் இதய துடிப்பு சுமார் 70 வயது மனிதன் போல குறைவாக இருந்தது. நாய்களுக்கு இதய துடிப்பு நிமிடத்துக்கு 120 முதல் 150 வரை இருக்க வேண்டும்.
மனிதர்களுக்கு இதய துடிப்பு குறையும் போது பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுவது வழக்கம். இதுபோல நாய் ரோனிக்கும் பேஸ்மேக்கர் கருவியை பொருத்த கால்நடை டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பிரதாப் திவாரி குடும்பத்தினரும் ஒப்பு கொண்டனர்.
பேஸ்மேக்கர் பொருத்தம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சைக்கு முன் ரோனியின் உடல் நிலை மோசமானது. அது 3 முறை மயங்கி விழுந்தது. எனினும் மீண்டு வந்தது. இதேபோல அதன் மார்பு, நுரையீரல் பகுதியில் இருந்த திரவத்தையும் டாக்டர்கள் அகற்றினர். இதேபோல இதய துடிப்பு குறைவாக இருந்த ரோனிக்கு மயக்க மருந்து கொடுப்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
எனினும் அனைத்து சவால்களையும் தாண்டி கடந்த திங்கட்கிழமை டாக்டர்கள் ரோனிக்கு வெற்றிகரமாக பேஸ்மேக்கர் கருவியை பொருத்தி சாதனை படைத்தனர்.
நம்மிடம் உள்ள குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், சிறந்த டாக்டர் குழுவினரால் ரோனிக்கு வெற்றிகரமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக டாக்டர் நபார் கூறினார். மேலும் இந்த அறுவை சிகிச்சை புதிய மைல்கல் எனவும் டாக்டர் மக்ராந்த் சவான் கூறினார்.
Related Tags :
Next Story