திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு சாமி ஹம்ச வாகனத்தில் வீதிஉலா காட்சி நடைபெற்றது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாளி வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) தங்கப் பல்லக்கு மற்றும் தோளுக்கு இனியான் நிகழ்ச்சியும், இரவு ஹனுமந்த வாகனத்தில் வீதிஉலா காட்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story