தியாகதுருகம் அருகே நண்பரை கத்தியால் குத்தியவா் கைது
தியாகதுருகம் அருகே நண்பரை கத்தியால் குத்தியவரை போலீசாா் கைது செய்தனா்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே கரீம்ஷாதக்கா பகுதியை சேர்ந்தவர் சையத்உசேன் (வயது 45). பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும், அதே பகுதி கலையநல்லூர் சாலையில் வசித்து வரும் முகமது இப்ராகிம் (52) என்பவரும் நண்பர்கள் ஆவர்.
சம்பவத்தன்று இரவு முகமது இப்ராகிம் தனது நண்பர் சையத்உசேனை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகமது இப்ராகிம், சையத் உசேன் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். சத்தம் கேட்டு சையது உசேன் மற்றும் அவரது மனைவி 2 பேரும் கதவைத் திறந்து, எதற்காக இரவு நேரத்தில் வந்து தொந்தரவு செய்கிறாய் என கேட்டதாக தெரிகிறது.
அப்போது அவசரத்திற்கு செல்போனை எடுத்து, பேசாத நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று அவர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சையத்உசேன் நெஞ்சில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சையத்உசேனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி சையத்உசேன் மனைவி அஸ்மர் பீ கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிமை கைது செய்தனர்.
Related Tags :
Next Story