தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சித்தலைவர் ஆய்வு
தாராபுரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர மன்ற தலைவர் கு. பாப்பு கண்ணன் திடீரென பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தாராபுரம், மார்ச்.11-
தாராபுரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர மன்ற தலைவர் கு. பாப்பு கண்ணன் திடீரென பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி தலைவர் ஆய்வு
தாராபுரம் நகராட்சி துறையின் அனைத்து பணிகளும் நகராட்சி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.இதனால் நகராட்சி குடிநீர் விநியோகம், சாலைவசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை பணிகள் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அங்காங்கே குப்பைகள் சேர்வது அப்புறப்படுத்தாமல் இருந்தது. புதிய நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள கு.பாப்பு கண்ணன் நகராட்சி அலுவலர்களுடன் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
அப்போது பஸ் நிலையத்தில் நகராட்சி சைக்கிள் ஸ்டேண்டில் அனுமதியில்லாமல் கட்டணத்தை உயர்த்தியது, கழிவறையை சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தது. மேலும் குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆணையாளர் ராமர் மற்றும் பொறியாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டதுடன் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க மக்களிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அப்போது நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன். ஆணையாளர் ராமர், பொறியாளர் ராமசாமி உள்பட கவுன்சிலர்கள் துரை சந்திரசேகர், முருகானந்தம், கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story