தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2022 11:25 PM IST (Updated: 10 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காட்பாடி

காட்பாடியை அடுத்த காளாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தன் (வயது 51), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்ேவறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவருடைய மனைவி கவிதா பனமடங்கி போலீசில் புகார் ெசய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story