வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல் '
வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல் ' வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சியின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நிலுவையில் உள்ள வரி வசூல், நிலுவையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் உள்ள வாடகை பாக்கி ஆகியவற்றை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் நாகராஜன் உத்தரவின் பேரில், நகராட்சி வருவாய் அலுவலர் விஜயஸ்ரீ மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பாசித், நயினா முகமது ஆகியோர் புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள வாடகை செலுத்தாத 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல் நகர்மன்ற வளாகத்தில் உள்ள 2 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடை வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் மீது இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்று ஆணையர் நாகராஜன் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story