புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்; அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்; அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்துனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மாதவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சி பணிகள் பற்றி விவாதம் செய்து பேசினர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் துணை தலைவர் மாதவன் தலைமையில் பேசினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் பல குழப்பம் ஏற்பட்டு வருவதாகவும், முதலில் ஒதுக்கப்படும் நிதி திடீரென பாதியாக குறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி இது எதற்காக நடத்தப்படுகிறது, என்ன விவரம் என்று புரியவில்லை என சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர் அதிகாரிகளின் பதிலில் திருப்தி அடையாமல் மாதவன் தலைமையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story