நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2022 12:04 AM IST (Updated: 11 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டகூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் உதவி தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story