தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 11 March 2022 12:06 AM IST (Updated: 11 March 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஒருவழி சாலையாக மாற்றப்படுமா? 
திருச்சி குட்ஷெட் சாலையில் இருந்து காஜாபேட்டைக்கு செல்லும் வழியில், கல்லறை பகுதிக்கும், அம்மன் கோவிலுக்கும் இடைபட்ட குறுகலான சாலையில் அடிக்கடி சிறிய விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தவிர்க்க இந்த சாலையை ஒருவழிசாலையாக அறிவித்து, காஜாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் அம்மன் கோவிலை சுற்றிச் சென்று வேர்ஹவுஸ் பகுதியை சென்றடையுமாறு செய்தால், விபத்துகளை அடியோடு தவிர்த்து விடலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம்.
 ஆபேல் குணசீலன், காஜாபேட்டை, திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருச்சி கணேசபுரம் 6-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.  
பொதுமக்கள், கணேசபுரம், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், காந்திநகர், திருச்சி.


Next Story