கறம்பக்குடி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 நாய்கள் உயிருடன் மீட்பு தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 நாய்கள் உயிருடன் மீட்கப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி கோட்டை காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி வீராச்சாமிக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் நேற்று காலை 2 நாய்கள் விழுந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி 2 நாய்களையும் உயிருடன் மீட்டனர். முட்புதர்கள் மண்டி பாழடைந்து கிடந்த கிணற்றில் துணிச்சலுடன் இறங்கி, நாய்களை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் வெகுவாக பாராட்டினார்கள். கறம்பக்குடி பகுதியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story